வெள்ளி, 10 ஜூன், 2011

இன்னொரு உலகம் !

ஜெயில்ல போட்டாங்கப்பா ! என இந்தியா முழுமையும் பர பரப்பாக 2G ஊழலில் மாட்டியுள்ள ராசா , கனி, அம்பானி கம்பெனி அதிகாரிகள் மற்றும் பலர் கதை என்னவாகும் என மெகா சீரியலை மறந்து செய்திகளை பார்க்கும் வண்ணம் தனியார் தொலைகாட்சிகளின் நேரடி ஒளிபரப்பு!
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் - எத்தனை அழகு! குளு குளு வென AC! மேற்கூறிய விசாரணை கைதிகள் மிக விரும்பும் இடமாம்..சிறையில் இல்லாத குளுகுளு இங்கே கிடைப்பதால். யார் யார் யாருடன் வருவார்கள், யார் அருகில் யார் அமருவார்கள் போன்றவை படம் போட்டு காண்பிக்க படும் நேர்த்தி..
பெயில் கிடைக்காம சோகமா கிளம்பி திகார் செல்லும் வரை வர்ணனைகளுடன்.
அடடா! சிறைவாசம் ஏதோ சங்கடமானது நினைத்தால் தவறு.
எப்படிப்பட்ட வசதிகள் யார் யாருக்கு என்பது உள்பட அழகா விளக்கிய அந்த திகார் ஜெயில் அதிகாரி- எதாவது சினிமாவில் அப்பா ரோல் செய்தால் ஆச்சரியம் இல்லை.
கனி யின் 6 ம் எண் சிறை 10 க்கு 6 அளவு, ஒரு கட்டில், ஒரு fan , படிக்க விரும்பும் புத்தகங்கள் , தென்னிந்திய உணவு ..வேற என்னய்யா வேணும்?
ஒரு வேளை சோத்துக்கு சிங்கியடிக்கும் 70 சதம் இந்திய குடிமக்கள் .
என்ன குற்றம் செய்தாலும் மேற்குடி மக்கள் . இதுதான் வாழ்க்கை!
பாட்மிட்டன் கோர்ட் , கிரிக்கெட் மைதானம், லைப்ரரி, விரும்பும் எந்த கோர்ஸ் யும் படிக்கும் வசதி, research கூட செய்யலாமாம்! பாட்டு, ஏதேனும் இசை கருவியில் பயிற்சி, கைவேலை, கார்பெண்டர் , எலேக்ட்ரிசியன் இப்படிவிரும்பும் வேலையில் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி , வாரத்தில் 3 முறை விரும்பிய எண்ணுக்கு போன் செய்யலாம் இப்படி வசதிகளை பற்றி அதிகாரி பேசிக்கொண்டு நடக்கும் போதே .ராசா பூப்பந்து விளையாடுவதை காண முடிந்ததும் பாக்கியமே!
அடுத்த அவர் அழைத்து சென்றது மெஸ்.மெத்து மெத்தென்று சுட சுட ரொட்டியும் 2 சைடு டிஷும் ..தால் , பாலக் ..TV காரர் ருசித்து சாப்பிட்டு பாராட்டியபோது, அட இப்படியும் ஒரு உலகம் தலைநகர் டெல்லியில் என்று வாய் பிளந்தது உண்மை!

2 கருத்துகள்:

  1. அருமையாக விவரித்ததற்கு நன்றி ! இப்படி கஷ்டப்பட்டு படிக்கறத விட்டுட்டு Tihar jail போயிடலாம் போலருக்கு !

    பதிலளிநீக்கு
  2. எல்லா ஜெயிலும் இப்படி இருக்குமா?
    எல்லோருமே பணக்கார குற்றவாளி ஆக முடியுமா?
    குவாண்டனமோவும், நம்ம ஊர் புழல் பற்றியும் தெரியுமா?
    தலித் மாணவர்களுக்கான அரசு விடுதிகளின் நிலைமை பற்றி அரசிற்காவது தெரியுமா?
    பொழுது போகாத அந்த தனியார் டிவி இதை பற்றி எல்லாம் காட்டினால்
    நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு