ஞாயிறு, 12 ஜூன், 2011

என்ன செய்ய போகிறது ?

பாஸ்கோ!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - எங்களின் கண் முன்னே
சூறையாடப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என
மூன்று நாட்களுக்கும் மேல் ஒரிசா கிராம மக்கள் போராட்ட களத்தில்.
பதினெட்டாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அலங்கார பந்தல் போட்டு, ஆயிரக்கணக்கில் மின்விசிறிகளும், பளபளவெனவிரிப்புகளும் ,
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்கேன்களும் என
தலைநகர் தில்லியில் ராம்தேவ் நடத்த முயன்ற
பகட்டான போராட்டம் அல்ல இது.
வாழ்வா சாவா என பெண்களும் குழந்தைகளும் கொளுத்தும் வெய்யிலில்
எந்த வித விளம்பரமும் இன்றி, கட்டாந்தரையில்.
எங்கே சென்றது மத்திய மாநில அரசுகள்?
ஸ்டார் ஹோடேலில் ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய
மத்திய மந்திரிமார்களே எங்கே சென்றீர்கள்?
எதிரே ஆயுதம் தாங்கிய படைகள், சுட்டெரிக்கும் வெயில் .
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என
கிராம மக்கள் .. குறிப்பாக சிறுவர் சிறுமியர் ,பெண்கள் .
பசி வெய்யிலில் தாங்களே அரணாக , கட்டாந்தரையில் குப்புறபடுத்து..
ஒரு முதியவர் ஒரு பாட்டிலில் இருந்து அந்தகுழந்தைகளின் வாயில் துளி துளி தண்ணீர் விடு வதையும், இருக்கும் துளி நீரை படுத்திருக்கும் மக்கள் மீது தெளித்து செல்வதையும் பார்க்க பதறுகிறது .
மக்கள் போராட்டம் வெற்றி பெறவேண்டும் .
தங்களின் வாழ்வாதாரமான துண்டு நிலத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் மக்கள்.
நியாயமான கோரிக்கைகளைகளுக்காக என போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பணம் புழங்கும் போராட்டமெனில் உடனடி கவனம் செலுத்தும்
மத்திய மாநில அரசுகள் ,
பாஸ்கோ போராட்டத்தில் என்ன செய்யபோகிறது ?

ஒரு தூரிகையின் பயணம்

எண்ணங்களை வண்ணங்களால் வடித்து கொடுக்கும் கலை
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை .
2 தோடு , ஒரு தம்புரா, கொண்டையில் வளைவாய் வைத்த பூ ..
M.S.சுப்புலட்சுமி யைஅப்படியே கண் முன் கொண்டு வரும் .
கன்னியாச்த்ரியின் அங்கி, கையில் ஒரு குழந்தை ,
மதர் தெராசவை நம் முன் நிறுத்தும்.
வெறும் கோடுகளும் , வளைவுகளும் அந்த தூரிகையின் வண்ணம் பட்டு ப்பல புருவங்களை உயரச் செய்யும்.
ஆனாலும் கூட , இந்திய மண்ணில் பிறந்து, விரும்பிய இடத்தில தம் மக்களோடு வாழ முடியாமல்.
அந்நிய நாட்டில் புகலிடம் தேடி வாழ்க்கையை வரைந்தது அந்த தூரிகை .
92 வருட வாழ்க்கையில்
இந்தியாவிற்கு பல பெருமைகளை தேடி கொடுத்த அந்த தூரிகை- வண்ணங்களில் சாதியை பார்க்கவில்லை
எண்ணத்தை வண்ணமாய் வடித்ததில் வேற்றுமைகளை தீட்டவில்லை.
சில மதவாத சக்திகளின் காமாலை கண்கள்
கலையின் கனவுகளை தவறாக பார்த்ததால்
தூரிகை துரத்தப்பட்டது .
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..
இருக்கும் போது கிடைக்காத அன்பும் அரவணைப்பும் ,
எண்ணிலடங்கா பாராட்டுதல்களும் , போற்றுதல்களும்
எங்கோ லண்டனில் இறந்தபின் .
கண்களை விற்று சித்திரம் வாங்குவோம்!
அய்யா M.F.ஹுசைன்!
உங்களின் மறைவு
இந்திய ஓவியக் கலையுலகின் பேரிழப்பு!

வெள்ளி, 10 ஜூன், 2011

இன்னொரு உலகம் !

ஜெயில்ல போட்டாங்கப்பா ! என இந்தியா முழுமையும் பர பரப்பாக 2G ஊழலில் மாட்டியுள்ள ராசா , கனி, அம்பானி கம்பெனி அதிகாரிகள் மற்றும் பலர் கதை என்னவாகும் என மெகா சீரியலை மறந்து செய்திகளை பார்க்கும் வண்ணம் தனியார் தொலைகாட்சிகளின் நேரடி ஒளிபரப்பு!
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் - எத்தனை அழகு! குளு குளு வென AC! மேற்கூறிய விசாரணை கைதிகள் மிக விரும்பும் இடமாம்..சிறையில் இல்லாத குளுகுளு இங்கே கிடைப்பதால். யார் யார் யாருடன் வருவார்கள், யார் அருகில் யார் அமருவார்கள் போன்றவை படம் போட்டு காண்பிக்க படும் நேர்த்தி..
பெயில் கிடைக்காம சோகமா கிளம்பி திகார் செல்லும் வரை வர்ணனைகளுடன்.
அடடா! சிறைவாசம் ஏதோ சங்கடமானது நினைத்தால் தவறு.
எப்படிப்பட்ட வசதிகள் யார் யாருக்கு என்பது உள்பட அழகா விளக்கிய அந்த திகார் ஜெயில் அதிகாரி- எதாவது சினிமாவில் அப்பா ரோல் செய்தால் ஆச்சரியம் இல்லை.
கனி யின் 6 ம் எண் சிறை 10 க்கு 6 அளவு, ஒரு கட்டில், ஒரு fan , படிக்க விரும்பும் புத்தகங்கள் , தென்னிந்திய உணவு ..வேற என்னய்யா வேணும்?
ஒரு வேளை சோத்துக்கு சிங்கியடிக்கும் 70 சதம் இந்திய குடிமக்கள் .
என்ன குற்றம் செய்தாலும் மேற்குடி மக்கள் . இதுதான் வாழ்க்கை!
பாட்மிட்டன் கோர்ட் , கிரிக்கெட் மைதானம், லைப்ரரி, விரும்பும் எந்த கோர்ஸ் யும் படிக்கும் வசதி, research கூட செய்யலாமாம்! பாட்டு, ஏதேனும் இசை கருவியில் பயிற்சி, கைவேலை, கார்பெண்டர் , எலேக்ட்ரிசியன் இப்படிவிரும்பும் வேலையில் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி , வாரத்தில் 3 முறை விரும்பிய எண்ணுக்கு போன் செய்யலாம் இப்படி வசதிகளை பற்றி அதிகாரி பேசிக்கொண்டு நடக்கும் போதே .ராசா பூப்பந்து விளையாடுவதை காண முடிந்ததும் பாக்கியமே!
அடுத்த அவர் அழைத்து சென்றது மெஸ்.மெத்து மெத்தென்று சுட சுட ரொட்டியும் 2 சைடு டிஷும் ..தால் , பாலக் ..TV காரர் ருசித்து சாப்பிட்டு பாராட்டியபோது, அட இப்படியும் ஒரு உலகம் தலைநகர் டெல்லியில் என்று வாய் பிளந்தது உண்மை!

இன்னும் வரும் ..

சுதந்திர இந்தியாவின் அருமை பெருமைகள் ஆயிரம் இருந்தாலும் , சமீப காலங்களில் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் போட்டிபோட்டு கவர் செய்வது என்னவோ ஊழல் செய்திகளே!
2G , CWG, SBAND இன்னும் ஆதர்ஷ் இப்படி..
ஊழலை ஒழிக்கும் அவதார புருஷர்களாக அன்னாஹசரேயும் ,ராம்தேவும்!! யாராவது 4 பேர், 4 கட்டம் கட்டி TV க்களில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த அக்கபோரை விரும்பாவிட்டாலும் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம் TV க்கு
அடிமையான மக்களுக்கு.
அக்குள் முடியுடன் அட்டகாசம் செய்யும் ராம்தேவும், துரத்தியது சரியா தவறா என கட்சி தலைவர்களும் , அதை கண்டித்து அன்னா என்ற குல்லா தாத்தா செய்யும் ரவுசும் , BJP பெருந்தலைகள் போராட்டமும் , கிடைத்த இடைவெளியில் சுஷ்மா ச்வராஜின் நடனம் சரியா தப்பா என 4 கட்டத்தில் 4 பேர் பேசுவதும், இதற்கிடையே காங்கிரஸின் பத்திரிகை கூட்டத்தில் செருப்பு வீச முயற்சி பற்றி மீண்டும் அதே 4 கட்டத்தில் 4 பேர் பேசிகொண்டே...
ஆனால் இதற்கிடையே ஒரு ருசிகரமான பேட்டி.திகார் சிறை பற்றி.
உங்களின் பொது அறிவு விசாலம் பெற ஒரு அருமையான நிகழ்ச்சி. பிரபலமான டிவி, திகார் சிறை அதிகாரியை ஓடும்காரில் பேட்டி...
தொடரும் அடுத்த இடுகையில்!

புதன், 1 ஜூன், 2011

முகமூடிகள்

இத்தனை வருட தொழிற்சங்க அனுபவத்தில் இது போன்ற மோசமான நிகழ்வுகளை
கண்டதில்லை..எங்கே செல்லும் இந்த பாதை என வேதனைபடவைக்கும் விஷயங்கள்..
மிகவும் மூத்த தோழர்களுடன் வேலைசெய்தபோது கிடைத்த அனுபவங்களுக்கும்,
இப்போது தலைவர்களாக வலம் வரும் தோழர்களின் அணுகுமுறைகளுக்கும் எத்தனை இடைவெளி?
தொழிற்சங்க கூட்டத்தில் எதிர் அணியை விமர்சித்தல் ஏற்கப்படும்..ஆனால் அணிக்குள் விமர்சனம் என்பது ?
விளக்க கூட்டம் , அறிக்கை சமர்ப்பித்தல்இதில் பேச்சு இடமில்லை. பிரச்னையும் இல்லை.
ஆனால் வேறு செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கும் சமயங்களில் கிடைக்கும்
அனுபவம் .. அமைதிகாப்பவர்கள் , ஆமோதிப்பவர்கள் பொறுப்பில் இருபவர்களின் செல்ல பிள்ளைகளாக வலம் வர முடியும்.
விமர்சிப்பவர்கள் தனிமைப்பட்டு ஒதுக்படுவது வாடிக்கையான வேடிக்கை.
பூர்ஷ்வா பூர்ஷ்வா என்று சொல்கிறார்களே ?
முற்போக்கு கருத்துக்களுக்கு சொந்தகாரகள் என்று சொன்னால் மட்டும் போதாது..வடக்கு, தெற்கு என கட்சி கட்டி, தனிநபர் வழிபாட்டில் மயங்கி நிற்கும் , குழு மனோபாவங்களுடன் கூறு போடும் போக்கினால்,
நடைமுறையில் மம்தாகளும், ஜெயாக்களும் முன்னேறும்போது,
பெண்ணகளின் முன்னேற்றம் மாதர்சங்கங்களிலும்,ஒருங்கினைப்புகுழுக்களிலும் மட்டும் முடிந்துவிடாமல்
இருக்க வேண்டுமானால் , தொழிற்சங்க அரங்குகளில் முற்போக்கு முகமூடிகள் நடத்தும் நாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும்.
ஆணும் பெண்ணும் நிகரென கொள்ளவதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!