ஞாயிறு, 12 ஜூன், 2011

ஒரு தூரிகையின் பயணம்

எண்ணங்களை வண்ணங்களால் வடித்து கொடுக்கும் கலை
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை .
2 தோடு , ஒரு தம்புரா, கொண்டையில் வளைவாய் வைத்த பூ ..
M.S.சுப்புலட்சுமி யைஅப்படியே கண் முன் கொண்டு வரும் .
கன்னியாச்த்ரியின் அங்கி, கையில் ஒரு குழந்தை ,
மதர் தெராசவை நம் முன் நிறுத்தும்.
வெறும் கோடுகளும் , வளைவுகளும் அந்த தூரிகையின் வண்ணம் பட்டு ப்பல புருவங்களை உயரச் செய்யும்.
ஆனாலும் கூட , இந்திய மண்ணில் பிறந்து, விரும்பிய இடத்தில தம் மக்களோடு வாழ முடியாமல்.
அந்நிய நாட்டில் புகலிடம் தேடி வாழ்க்கையை வரைந்தது அந்த தூரிகை .
92 வருட வாழ்க்கையில்
இந்தியாவிற்கு பல பெருமைகளை தேடி கொடுத்த அந்த தூரிகை- வண்ணங்களில் சாதியை பார்க்கவில்லை
எண்ணத்தை வண்ணமாய் வடித்ததில் வேற்றுமைகளை தீட்டவில்லை.
சில மதவாத சக்திகளின் காமாலை கண்கள்
கலையின் கனவுகளை தவறாக பார்த்ததால்
தூரிகை துரத்தப்பட்டது .
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..
இருக்கும் போது கிடைக்காத அன்பும் அரவணைப்பும் ,
எண்ணிலடங்கா பாராட்டுதல்களும் , போற்றுதல்களும்
எங்கோ லண்டனில் இறந்தபின் .
கண்களை விற்று சித்திரம் வாங்குவோம்!
அய்யா M.F.ஹுசைன்!
உங்களின் மறைவு
இந்திய ஓவியக் கலையுலகின் பேரிழப்பு!

2 கருத்துகள்:

  1. அவரை இறுதிவரை இந்தியக் குடிமகனாக இருக்கவிடாமல் தடுத்த "மதவாத சக்திகளின்" மீது கோபம் வருகிறது...எதுவும் செய்யமுடியாத, செய்யத்தெரியாத கோபம்...

    பதிலளிநீக்கு
  2. மதவாத சக்திகளை புறகணிப்பதே முழுமையான கோபம்.

    பதிலளிநீக்கு