வாழ்க்கை பயணத்தில் ஓட்டமும் நடையுமாக ..
சந்திக்கும்,மனிதர்கள் , கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ..
கிடைக்கும் அனுபவங்கள்..உற்சாகமாகும் மனது!
மறந்துபோகும் சிலசமயம் சில விஷயங்கள்..
தொடர்ந்துவரும் சில நினைவுகள் எப்போதும்..
அந்த காவலாளியும் உடன் வந்த தோழரும் , நான் சந்திக்க மறுத்த
முகம் அறியாத அந்த நபரும்..அன்றைய நிகழ்ச்சி..
எதனையோ இழந்து எதனையோ அடைகிறோம் !
இப்படித்தான் வாழ்க்கை!!
இன்று புதிதாய் பிறந்தேன்!
வெள்ளி, 1 அக்டோபர், 2010
ஞாயிறு, 28 மார்ச், 2010
நினைவுகள்
நினைவுகள் உதிருமா?
காய்ந்து போன சருகுகள் போல,
காற்றடித்தால் பொலபொலக்கும் வேப்பம்பூ போல
மணம் வீசி மலர்ந்து விழும் பவழமல்லி போல
குலுக்கினால் கொட்டிவிடும் அருநெல்லி போல
நினைவுகள் உதிருமா?
காலத்திற்கும் கலையாமல் உற்சாக ஊற்றாக
உள்ளுக்குள் நிறைந்து நிற்கும் நினைவுகள்
கலர் கலராய் மனசுவற்றில் பதிந்து நிற்க,
நினைத்த மாத்திரத்தில் உடம்பை குலுங்க வைக்கும்..
கண்களை குளமாக்கும்..முகத்தில்
நெருப்புவீசும் பார்வைகள்,வார்த்தைகள் , நடத்தைகள் போன்ற
வேண்டாத நினைவுகளை மட்டும்
நம் நினைவு பேழையில் இருந்து
உதிர்த்து விட முடியுமா?

புதன், 30 டிசம்பர், 2009
மனசு
மனிதர்களுக்கு இடையே எத்தனை சுவர்கள்?
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்..அம்மா,அப்பா, உடன் பிறந்தவர்கள், கணவன்,மனைவி,
மற்ற உறவுகள்,நண்பர்கள்,சமூகம் இப்படி ஒருவருக்கொருவர் இடையே
வித விதமான சுவர்கள்?
அன்பையும், புரிதலையும் எந்த பாசாங்குமின்றி வெளிப்படுத்த எப்போது
தொடங்கபோகிறோம்?
கோபத்தையும், வருத்தத்தையும் எதிராளிக்கு சேதாரம் இன்றி தெரிவிக்க எப்போது கற்போம்?
பாராட்டுதல்களையும்,, மகிழ்ச்சியையும் எந்த அளவுகளும் இன்றி பொழிவதற்கு
ஏன் தயங்குகிறோம்?
உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் எந்த தயக்கமுமின்றி வெளிக்கொணர
ஏன் தவறுகிறோம்?
கண்ணுக்கு தெரியாத இந்த சுவர்களை எப்படி உடைக்க போகிறோம்?
நாம் நாமாக எப்போது இருப்போம்?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)