மனிதர்களுக்கு இடையே எத்தனை சுவர்கள்?
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்..அம்மா,அப்பா, உடன் பிறந்தவர்கள், கணவன்,மனைவி,
மற்ற உறவுகள்,நண்பர்கள்,சமூகம் இப்படி ஒருவருக்கொருவர் இடையே
வித விதமான சுவர்கள்?
அன்பையும், புரிதலையும் எந்த பாசாங்குமின்றி வெளிப்படுத்த எப்போது
தொடங்கபோகிறோம்?
கோபத்தையும், வருத்தத்தையும் எதிராளிக்கு சேதாரம் இன்றி தெரிவிக்க எப்போது கற்போம்?
பாராட்டுதல்களையும்,, மகிழ்ச்சியையும் எந்த அளவுகளும் இன்றி பொழிவதற்கு
ஏன் தயங்குகிறோம்?
உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் எந்த தயக்கமுமின்றி வெளிக்கொணர
ஏன் தவறுகிறோம்?
கண்ணுக்கு தெரியாத இந்த சுவர்களை எப்படி உடைக்க போகிறோம்?
நாம் நாமாக எப்போது இருப்போம்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நாம் நாமாக எப்போது இருப்போம்?
பதிலளிநீக்குஇந்த போராட்டம்தான் எனக்குள்ளும் எப்போதும்.. அத்தனையோடும் நான் ஒத்துப் போகிறேன்.. அதே கேள்விகளுக்கு விடை தேடிய பயணத்தில் சந்திக்கிற நபர்கள்தாம் எத்தனை சுவாரஸ்யமானவர்கள்?!