ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020
இதுதான் வாழ்க்கை!
இப்போதெல்லாம் ஓடி ஓடி ரயிலேறி 9.30 க்கு ஆபீஸ் போகும் ஆர்வம் இல்லை.. ஏதோ யோசித்தபடி மவுன்ட் ரிட்டேன் வண்டி பிடித்து , ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துகொண்டு போவதும் நன்றாகத்தான் இருக்கிறது.
சைதாபேட் இல் ஏறிய அந்த சின்ன பையன் கையில் பிஸ்கட் டின் , சுருள் முடி, துரு துரு முகம், 10 வயது இருக்கும். வழியில் உட்கார்ந்து பாவம்போல தூங்கி போனான்.
சேத்துப்பட்டு வரை நல்ல தூக்கம். கண்ணை விழிக்க காத்திருந்த நான், உடம்பு சரியில்லையா னு கேட்ட வுடன் சிரித்தபடி இல்லைன்னு பளிச்சுனு சொன்னது அழகா இருந்தது.
1.எங்கே இருந்து வர?2.ஏன் இந்த நேரத்தில் பிஸ்கட் விக்கற?3.பசிக்குதா, ஏதாவது சாப்பிடுறியா ? என்ற என் கேள்விகளுக்கு டாண் டாண் னு
1. தாம்பரம் . 2.வேலைக்கு போறேன்.3. ஒண்ணும் வேண்டாம் அக்கானு பதில் சொன்னது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக